முன்னாள் அதிகாரிகளை பயன்படுத்த தவெக திட்டம்! Vijay | TVK | TN Election
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களுக்கு உதவ, முன்னாள் அரசு அதிகாரிகளை, தன்னார்வலர்களாக நியமிக்க, அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. த.வெ.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவோரிடம் தபால் மற்றும் நேரடியாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது, நேற்றுடன் முடிந்தது. விரைவில், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடக்கிறது. இந்நிலையில், த.வெ.க. சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதவ, தன்னார்வலர்களை நியமிக்க, அக்கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
பிப் 21, 2026