/ தினமலர் டிவி
/ அரசியல்
/ புதிய நிர்வாகிகள் அறிவிப்பால் கட்சியினர் வருத்தம்! TN Election | BJP | Kariyakartha
புதிய நிர்வாகிகள் அறிவிப்பால் கட்சியினர் வருத்தம்! TN Election | BJP | Kariyakartha
தமிழக பா.ஜ.வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நீண்ட இழுபறிக்கு பின்பே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். தன் ஆதரவாளர்கள் இல்லை என பல முன்னாள் முக்கிய நிர்வாகிகள் புலம்பும் வகையில் அந்த அறிவிப்பு வெளியானது. அதன்பின் ஒருவழியாக கட்சி செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விரும்பிய எண்ணிக்கையில் தொகுதிகளை பெறுவதில் நடந்த பேரம் நீண்டது. ஆளாளுக்கு 60, 40 எனப் பேசி ஒருவழியாக பா.ஜ.வுக்கு 27 தொகுதிகள் என முடிவுக்கு வந்தது.
ஏப் 06, 2026