தட்டித்தூக்கப்படும் கனிம லாரிகள்... தவெக அரசு அதிரடி | TN illegal mining issue | TK Prabhu | CM Vija
கனிமம் கடத்திய 200 லாரிகள் பறிமுதல் தவெக வந்ததும் முதல் செய்கை தமிழகம் முழுதும் அனுமதியின்றி கருங்கல், மணல் ஏற்றி சென்ற, 200 லாரிகளை, கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் மொத்தம் 2,000 இடங்களில் கருங்கல் வெட்டி எடுக்க குவாரிகளுக்கு கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளது. இதில் பல இடங்களில் அனுமதித்ததை விட அதிகமாக கருங்கல் வெட்டி எடுக்கப்படுகிறது. இது போக, 1,000 இடங்களில் அனுமதியே இல்லாமல் கல் குவாரிகள் செயல்படுகின்றன என்றும் புகார் உள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திலேயே கனிம கொள்ளையை தான் பல இடங்களில் முக்கிய பிரச்னையாக மக்கள் எழுப்பினர். தவெகவும் கனிம கொள்ளையை தடுப்போம் என்று சொல்லி இருந்தது. இதற்கிடையே திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்து விட்டது. கனிம வளத்துறை அமைச்சராக காரைக்குடி எம்எல்ஏ பிரபு நியமிக்கப்பட்டார். கேரளாவுக்கு தாராளமாக கல், மண், மணல் என கனிமங்கள் செல்லும் தென்காசி மாவட்டம் புளியரை செக்போஸ்ட்டில் பிரபு ரகசிய ஆய்வு செய்திருந்தார். நள்ளிரவிலும் வரிந்து கட்டி லாரிகள் சென்றதை பார்த்து ஆடிப்போனார். தமிழகம் முழுதும் அனுமதி இன்றி கனிமம் கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக குவாரிகள், கனிம லாரிகள் செல்லும் வழித்தடங்களில் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி சோதனை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக தமிழகம் முழுதும் கனிமம் கடத்திய 200 லாரிகளை கனிம வளத்துறையினர் மடக்கி பிடித்தனர். உரிய ஆவணம் இல்லாததால் லாரிகளை போலீசார் கைப்பற்றினர். இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 2 கல்குவாரிகளும் இழுத்து மூடப்பட்டன. இது பற்றி தொடர்ந்து விசாரணை நடக்கிறது. குவாரிகளில் ஆய்வை தொடரும் படி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே நடவடிக்கை பற்றி பேசிய தமிழக மணல், எம் சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர் செல்வம், சம்பவங்களில் வழக்கு பதிவு செய்து பிரச்னையை அத்துடன் முடிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு பதிலாக, அந்த லாரிகளில் ஏற்றப்பட்ட கருங்கல், மணல் ஆகியவை எங்கிருந்து வந்தது, அதில் சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.