உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசியல் மாற்றங்களுக்கு அஸ்திவாரம் போட்ட கருத்துக்கணிப்பு | TN next CM | Cvoter survey | Stalin | Vi

அரசியல் மாற்றங்களுக்கு அஸ்திவாரம் போட்ட கருத்துக்கணிப்பு | TN next CM | Cvoter survey | Stalin | Vi

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து தமிழகமும் தேர்தலை சந்திக்க உள்ளது. இதுவரை திமுக, அதிமுக என இருந்த தேர்தல்களம் தமிழக வெற்றிக்கழகம் வரவால் சற்று மாற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் விரும்பும் அடுத்த முதல்வர் யார்? என்று சி வோட்டர்ஸ் என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. கருத்துக்கணிப்பில், 27 சதவீதம் பேர், தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அரசியல் களத்துக்கு புதுமுகமான நடிகர் விஜய்க்கு 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வரான அதிமுக பொதுச் செயலர் பழனிசாமிக்கு 10 சதவீதம் பேரும், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்டாலினுக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் இருப்பது வரும் மாதங்களில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் மீதமுள்ள 36 சதவீதம் பேரின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பது தேர்தல் முடிவுகளை புரட்டி போடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. ஸ்டாலினுக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் இருப்பது, வரும் மாதங்களில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும், மீதமுள்ள 36 சதவீதம் பேரின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பது, தேர்தல் முடிவுகளை புரட்டி போடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. முதல்வராக ஸ்டாலினின் தனிப்பட்ட செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு 22 சதவீதம் பேர் மிகவும் திருப்தி என்று கூறியுள்ளனர். ஓரளவுக்கு திருப்தி என 33 சதவீதம் பேரும், 22 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றும் 23 சதவீதம் பேர் எதையும் கூற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமியின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 8 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ஓரளவுக்கு திருப்தி என 27 சதவீதம் பேரும் 32 சதவீதம் திருப்தி இல்லை என்றும், 33 சதவீதம் பேர் எதையும் கூற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போதுள்ள முக்கிய பிரச்னையாக 15 சதவீதம் பேர் பெண்கள் பாதுகாப்பை குறிப்பிட்டுள்ளனர். 12 சதவீதம் பேர் விலைவாசி உயர்வையும், 10 சதவீதம் பேர் போதை மற்றும் மது சம்பவங்களையும் கூறியுள்ளனர்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ