தொகுதி பங்கீடு பேச்சை துவக்க கோரிக்கை | TNBJP | Seat Sharing
பாஜ வட்டாரங்கள் கூறியதாவது: திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என தேஜ கூட்டணியில் தவெகவை சேர்க்க மத்திய உள்துறை அமித்ஷா விரும்பினார். இதற்காக அவர் விஜயுடன் நேரடியாகவும், நண்பர்கள் வாயிலாகவும் பேச்சு நடத்தினார். ஆனால் விஜய் பிடிகொடுக்கவில்லை. முதல் தேர்தலிலேயே பாஜ உடன் கூட்டணியில் சேர்ந்தால் தமிழகத்தில் சிறுபான்மையினரின் ஆதரவை எந்த காலத்திலும் பெற முடியாது. தொடர்ந்து கட்சியை நடத்துவது சிரமம் என கூறி தவெகவை கூட்டணியில் சேர விடாமல் அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி தடுத்து விட்டனர். #2026Election | #Election Update | #TNElection2026 #TamilNaduPolitics #Election2026 #PoliticalDebate #PoliticalStrategy #TamilNaduElections #AlliancePolitics #VoterEngagement #ElectionAnalysis #PoliticalNews #CurrentAffairs #SouthIndianPolitics #NDAvsDMK