/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விசாரிக்க வருகிறது டில்லி பாஜ டீம் | TNBJP | Campaign | Election Campaign | 2026 Election | Election
விசாரிக்க வருகிறது டில்லி பாஜ டீம் | TNBJP | Campaign | Election Campaign | 2026 Election | Election
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜ பல வியூகங்களை வகுத்துள்ளது. 12 ஆண்டு கால மோடி ஆட்சியின் சாதனைகள், குறிப்பாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜ முடிவு செய்தது. மூன்று அல்லது நான்கு ஓட்டுச்சாவடிகளை சக்தி கேந்திரம் என பாஜ வரையறுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 22,000 சக்தி கேந்திரங்களிலும் நாளை நமதே; தமிழ்நாடும் நமதே என்ற முழக்கத்துடன் தெருமுனை பிரசார கூட்டங்களை நடத்த பாஜ தலைமை உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்ய ஒரு கூட்டத்துக்கு 5,000 வீதம் 11 கோடியை பாஜ மேலிடம் வழங்கியது. இந்த பணத்தை முழுமையாக செலவழிக்காமல், பாஜ நிர்வாகிகள் ஸ்வாகா செய்து விட்டதாக கூறப்படுகிறது.
மார் 17, 2026