உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உடையும் பெரிய கட்சி? அலறவிடும் விஜய் மூவ் TVK won | CM Vijay | DMK vs TVK | ADMK | TN Election 2026

உடையும் பெரிய கட்சி? அலறவிடும் விஜய் மூவ் TVK won | CM Vijay | DMK vs TVK | ADMK | TN Election 2026

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். தவெகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக மெகா மாஸ்டர் பிளானை விஜய் செயல்படுத்த துவங்கி விட்டார். இதுகுறித்து த.வெ.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியது: தனிப்பெரும் கட்சியாக எங்கள் த.வெ.க., உருவெடுத்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. ஆனால், ஆட்சி அமைக்க போதுமான பலம் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. அதற்கு தடையாக இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இப்போது தோல்வி அடைந்து விட்டார். இந்நிலையில் தான் விஜய்க்கு காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல் போனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆட்சி அமைக்க உதவுமாறு விஜய் கோரிக்கை வைத்தார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும் என்று ராகுல் சொல்லி இருக்கிறார். காங்கிரசுக்கு இப்போது 5 எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளனர். ஆட்சி அமைக்க இவர்கள் ஆதரவு மட்டுமே போதாது. #TVKVijay #TNElection2026 #DMKvsTVK #TNElectionResult #DMKvsADMKvsTVKvsNTK #Stalin #Vijay #Seeman #Annamalai #EPS #Modi #AmitShah #TamilNaduPolitics #ElectionDebate #TamilPolitics #Voting2026 #ElectionAnalysis #PoliticalRivalry #Campaign2026

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை