உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்காவின் பொற்காலத்துக்கு கனடாவின் வளங்கள் தேவை! | Trudeau warns Trump| imposing tariff

அமெரிக்காவின் பொற்காலத்துக்கு கனடாவின் வளங்கள் தேவை! | Trudeau warns Trump| imposing tariff

இது தான் உங்கள் முடிவா? பதிலடி தர நாங்கள் ரெடி! அமெரிக்க அதிபராக டெனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் பல அதிரடியான உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பது. பிப்ரவரி 1 முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. கனடா, மெக்சிகோவை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதும், போதை பொருள் கடத்தலும் எல்லையில் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க அந்த நாடுகள் தவறி விட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தும் வகையில் வரி உயர்வின் மூலம் செக் வைத்துள்ளார். டிரம்பின் இந்த முடிவுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவுக்கு 25 சதவீத வரி விதிப்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருந்தால், அதற்கு எதிர்வினை ஆற்ற நாங்களும் தயாராக இருக்கிறோம்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை