/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டிரம்பை சீனாவுக்கு வர வைத்து மிரட்டிய ஜின்பிங் Trump Xi Jinping meet | US China talk | Taiwan issue
டிரம்பை சீனாவுக்கு வர வைத்து மிரட்டிய ஜின்பிங் Trump Xi Jinping meet | US China talk | Taiwan issue
சர்வதேச அரசியலில் வல்லரசு நாடுகளான சீனாவும், அமெரிக்காவும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கின்றன. ஒருவரையொருவர் பகையாளியாகவும், போட்டியாளராகவும் கருதும் இந்த நாடுகளின் இரு அதிபர்களும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2வது முறை அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் சரமாரியாக வரி போட்டு நாடுகளை பந்தாடினார். சீனாவையும் அவர் வரியால் தண்டித்தார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்காவுக்கு சகட்டுமேனிக்கு வரிப்போட்டது. அமெரிக்காவுக்கு வழங்கி வந்த அரிய வகை கனிமத்தை உடனடியாக நிறுத்தியது.
மே 14, 2026