உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாற்று மத ஊழியர்களுக்கு TTD கொடுத்த 2 ஆப்ஷன் | TTD removes | non-Hindu employees

மாற்று மத ஊழியர்களுக்கு TTD கொடுத்த 2 ஆப்ஷன் | TTD removes | non-Hindu employees

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்களில் ஹிந்து அல்லாத மாற்று மதத்தை பின்பற்றும் 18 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்கள், தேவஸ்தானம் நடத்தும் கல்லூரிகள், பாலிடெக்னிக், நலத்துறை, மருத்துவமனை, செயல் அலுவலர் அலுவலகம், விடுதிகளில் பணியாற்றுபவர்கள். தேவஸ்தான சட்ட விதிமுறைகளின்படி, ஹிந்து ஊழியர்கள் மட்டுமே தேவஸ்தானத்தில் பணியாற்ற முடியும். அதன்படி, ஹிந்து மதத்தை பின்பற்றாத 18 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாற்று மதத்தை பின்பற்றும் இவர்கள், தேவஸ்தானம் நடத்தும் ஹிந்து விழாக்களிலும் கலந்து கொண்டு இருப்பது கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை, உணர்வுகளை பாதிப்பதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. தேவஸ்தான முடிவின்படி, இந்த 18 ஊழியர்களும் தற்போதைய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். கோயில் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊழியர்கள் வேறு அரசு துறைகளுக்கு டிரான்ஸ்பர் கேட்டு செல்லலாம்; அல்லது விருப்ப ஓய்வு பெறலாம் என்று தேவஸ்தானம் இரண்டு வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதற்கு இணங்க தவறினால் தேவஸ்தானமே முடிவு செய்யும் என கூறப்பட்டு உள்ளது.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ