டிடிவி தினகரனின் கோரிக்கை ஓகே சொல்லுமா பாஜ? TTV Dinakaran Demand Seats
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெற உள்ளது. என்டிஏ கூட்டணியில் உள்ள அமமுகவின் பொதுச்செயலர் தினகரன், டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்தார். அப்போது, அமமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் ஒதுக்குமாறு தினகரன் வலியுறுத்தி உள்ளார்; குறைந்தது 12 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். இது குறித்து, அமமுக வட்டாரங்கள் கூறும்போது, கடந்த லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணியில், தேனி, திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் அமமுக போட்டி யிட்டது. தென் மாவட்டங்களில், அமமுகவுக்கென கணிசமான ஓட்டு வங்கி உள்ளது. இதனால், வரும் சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் 12 தொகுதிகள் கேட்டுள்ளோம். அதை பரிசீலிப்பதாக பாஜ தலைமையும் சொல்லி இருக்கிறது என்றனர். #NDAAlliance #AMMKSeatsSharing #BJP #TTVDinakaran #SeatSharing #PoliticalAlliance #TamilNaduPolitics #Elections2023 #PoliticalDrama #TTVDinakaranDemand #BJPAlliances #SeatsForAMMK #PartyCoalition #PoliticalStrategies #ElectionCampaign #DemandForSeats #IndianPolitics #PoliticalNegotiations #AllianceDynamics #PartyPositioning