உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு விஜய் உதவுவார்: தினகரன்! TTV Dinakaran | AMMK | Vijay | TVK | DMK

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு விஜய் உதவுவார்: தினகரன்! TTV Dinakaran | AMMK | Vijay | TVK | DMK

அ.ம.மு.க பொதுச்செயலர் தினகரன் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரும். அதன் பிறகு, தொகுதி பங்கீடு முடிந்து, தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம். அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும். தி.மு.க. கூட்டணி, வலுவான கூட்டணி, கொள்கை கூட்டணி என்றெல்லாம் கதை விடுகின்றனர். காங்கிரஸ் சார்பாக குழு அமைத்து பல மாதங்கள் ஆகிறது. இன்னும் தி.மு.க. சார்பில் குழு அமைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சொல்கிறார். தி.மு.க கூட்டணி திரிசங்கு நிலையில் உள்ளது. ஒரே ஒரு குடும்பம், இந்த ஆட்சியை கையிலே வைத்துக் கொண்டு, தமிழகத்தை சுரண்டுகிறது. வாரிசுக்கு முடி சூட முதல்வர் துடிக்கிறார். தனி நபரின் ஆசாபாசங்களுக்கு அரசியல் நடத்த முடியாது. கட்சி என வரும்போது உறவு, நட்புக்கு எல்லாம் இடமில்லை. கடந்த சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டதால், தி.மு.க.வுக்கு வாய்ப்பாக அமைந்தது. இம்முறை அந்த வாய்ப்பு இருக்காது. த.வெ.க. தலைவர் விஜயால், பிற கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என கருத்துக் கணிப்புகளில் கூறுகின்றனர். உண்மையில் விஜயின் வருகை, தி.மு.க. ஓட்டு வங்கியை பெரிய அளவில் பாதிக்கும். அது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு உதவியாக இருக்கும். இதனால் தான், விஜயை நான் வரவேற்கிறேன், என்று அவர் கூறினார்.

பிப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை