உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒரே நாளில் 2 குட் நியூஸ்: தவெக தொண்டர்கள் குஷி! TVK approved by Election Commission | Actor Vijay

ஒரே நாளில் 2 குட் நியூஸ்: தவெக தொண்டர்கள் குஷி! TVK approved by Election Commission | Actor Vijay

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அக்கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 28ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம் மற்றும் கலெக்டரிடம் மனு அளித்தனர். மாநாடு தொடர்பாக போலீஸ் தரப்பில் 21 கேள்விகள் கேட்டிருந்த நிலையில் அதற்கான பதில்களை விஜய் தரப்பில் சமர்பித்தனர். அதைத்தொடர்ந்து மாநாடு நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமான பதிவுக்காக காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.

செப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை