உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை! TVK Candidate | Krishnan | Lalgudi

பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை! TVK Candidate | Krishnan | Lalgudi

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் தவெக சார்பில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தவெக வேட்பாளர் கிருஷ்ணனின் மைத்துனர் அரவிந்த் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வளவனூர் பகுதியில் இருக்கும் அரவிந்த் வீட்டில் தேர்தல் அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்ச ரூபாய் சிக்கியது. வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்த தமிழ்செல்வன் அந்த பணத்தை பறிமுதல் செய்தார். வேட்பாளரின் உறவினர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. #TVKCandidate #Krishnan #Lalgudi #50LakhSeized #TNElection #Election2023 #TamilNaduPolitics #Corruption #VoteSmart #PoliticalAccountability #ElectionCampaign #JusticeForAll #PublicAwareness #ElectionsMatter #CleanElections #TransparentGovernance #DemocracyInAction #PoliticalNews #TamilNaduNews

ஏப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை