உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சீமான் முதல் சுற்றுப்பயணம் வரை விஜய் கொடுத்த அப்டேட் | Vijai | TVK | Vijai Meeting | Seeman

சீமான் முதல் சுற்றுப்பயணம் வரை விஜய் கொடுத்த அப்டேட் | Vijai | TVK | Vijai Meeting | Seeman

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடந்தது. அதில் விஜய் பேசியது குறித்து, அவரது கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த கட்டமாக பொதுக்குழு கூட்டம் நடத்த தயாராக வேண்டும். புத்தாண்டில் சுற்றுப் பயணம் செல்வேன். கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வீடு, வீடாக சென்று மக்களிடம் விளக்க வேண்டும். நமக்கு தேசிய அளவில் பாஜ மாநில அளவில் திமுக பொது எதிரிகள் என்பதை மாநாட்டில் விளக்கி விட்டோம். தீர்மானங்களிலும் நாம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்துள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் குறைகளை சுட்டிக் காட்டுவோம். ரஜினி வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது ரசிகர்களையும் நாம் அரவணைக்க வேண்டும். சீமானை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அவரை விமர்சிக்க வேண்டாம் என விஜய் பேசியதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ