முன்ஜாமின் கேட்ட தவெக நிர்வாகிக்கு டோஸ் விட்ட நீதிபதி TvkWorker| Tvk| Vijay| Actor Vijay| Namakkal
தவெக தலைவர் விஜய், கடந்த 27 ம் தேதி நாமக்கல்லில் பிரசாரம் செய்தார். அப்போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக, தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீதும்போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில், முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சதீஷ் முறையிட்டார். அந்த மனுவில், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை; அரசியல் காரணங்களுக்காக என்னையும் வழக்கில் சேர்த்து விட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்தேன் என்பதற்காக வழக்கு போட்டுள்ளனர். போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவும், கோர்ட் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் சந்தோஷ் வாதிடும்போது, அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாக செய்வதாக கூறி, பிரசாரத்துக்கு மனுதாரர் அனுமதி பெற்றார். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பொது சொத்துகளும் நாசப்படுத்தப்பட்டு உள்ளன . இது தொடர்பாக மனுதாரர் மீது மேலும் 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக கூறினார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை ஆதாரமாக தாக்கல் செய்தனர். இதற்கு தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி செந்தில்குமார், கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தமக்கு எதுவும் தெரியாது என்று மனுதாரர் எப்படி சொல்லலாம்? என கேட்டார். கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? எனவும் சதீஷ்குமாரை நீதிபதி கேட்டார். அத்துடன் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Tvk #ActorVijayCampaign #Namakkal Incident| #HospitalAttack| #TvkWorkerBailCase