வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எத்தனைஊழல் கட்சிகள் சேர்ந்தாலும் இனி மக்களின் மனதை மாற்றமுடியாது .
DMK, ADMK, BJP ஒண்ணு கூடிட்டாங்க... மெகா ட்விஸ்ட் CM Vijay | TVK vs DMK ADMK BJP | Cash for MLA Row
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து அரசியல் களம் அனல் பறக்கிறது. ஒரு பக்கம் அதிமுகவின் எம்எல்ஏக்களும் முன்னணி முகங்களாக இருப்பவர்களும் கொத்துக்கொத்தாக ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் சேர்கின்றனர். தவெகவினர் குதிரை பேரம் நடத்தி தங்கள் எம்எல்ஏக்களை இழுப்பதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் தவெக எம்எல்ஏக்களிடம் திமுக குதிரை பேரம் நடத்தியதாக கூறி வழக்குப்பதிவு செய்து அதிரடி காட்டி இருக்கிறது போலீஸ். திமுகவின் முக்கிய புள்ளியாக இருக்கும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியை இந்த வழக்கில் தேடி வருகின்றனர். இப்படி குதிரை பேரம் டாப்பிக் தமிழகத்தில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், தவெகவுக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜ ஒரே புள்ளியில் இணைந்து மேலும் பரபரப்பை எகிற வைத்துள்ளன.
எத்தனைஊழல் கட்சிகள் சேர்ந்தாலும் இனி மக்களின் மனதை மாற்றமுடியாது .