வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பழைய கட்சி பெருச்சாளிகளின் சூழ்ச்சியில் சிக்கி தவிக்கும் தவெக
வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெக விருப்ப மனு சீக்ரெட் | TVK | Vijay | DMK | ADMK
சட்டசபை தேர்தலுக்காக, த.வெ.க., சார்பில் போட்டியிட, கடந்த 6ம் தேதி விருப்ப மனு வழங்கப்பட்டது. 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. முதல் நாளில், 10,000 பேர் வாங்கி சென்றனர். ஆன்லைன் வழியே 40,000 பேர் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் 50,000 பேர் விருப்ப மனுக்களை பெற்றதாக கூறப்பட்டது. அவற்றை பூர்த்தி செய்து, 20ம் தேதிக்குள், பனையூர் அலுவலகத்துக்கு திருப்பி அனுப்ப, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது, 10,000 ரூபாய் செலுத்த வேண்டும் என, பலருக்கும் தெரியவில்லை. அந்த தகவல் தெரிந்தபின், பலரும் மனுவை பூர்த்தி செய்யவே இல்லை. இதனால், ஒரு தொகுதிக்கு 20 விருப்ப மனு கூட, உருப்படியாக திரும்பி வரவில்லை.
பழைய கட்சி பெருச்சாளிகளின் சூழ்ச்சியில் சிக்கி தவிக்கும் தவெக