உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசு அலுவலகங்களுக்குள் சென்று திடீர் ஆய்வு! | TVK | TVK CADRES | CM Vijay | Reels

அரசு அலுவலகங்களுக்குள் சென்று திடீர் ஆய்வு! | TVK | TVK CADRES | CM Vijay | Reels

அரசு அலுவலகங்களுக்குள் சென்று திடீர் ஆய்வு! | TVK | TVK CADRES | CM Vijay | Reels தேனியில் தவெக நிர்வாகியாக இருப்பவர் அஜிதா. இவர் தன்னை தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைமை என கூறி அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து வருகிறார். தவெக மகளிர் அணி தலைமை என்ற பெயரில் ஒரு டீம் தேனி கலெக்டர் ஆபீஸ் மற்றும் அரசு மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு செய்கின்றனர். இதை ரீல்ஸ் எடுத்தும் பதிவிடுவதால் சர்ச்சை கிளம்பி உள்ளது. Breath விவசாயிகள் மற்றும் மகளிர் குழுக்களின் கோரிக்கைகள் கேட்டறிந்ததாக தவெக தலைமையை டேக் செய்து பதிவிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மகளிர் அணி தலைமை என்று யாரையும் நியமிக்கப்படவில்லை. கட்சி பெயரை கூறி அரசு அலுவலகங்களுக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் பெயர் மற்றும் பொறுப்புகளை தவறாக பயன்படுத்துவது விதிமீறலாகும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். பல இடங்களில் இதே போல் தவெகவினர் அரசு அலுவலகங்களுக்குள் சென்று ஆய்வு நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மே 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை