CBI இறங்கியதால் விஜய் வீட்டில் மாறிய காட்சிகள் karur stampede | tvk vijay ananth meeting | cbi probe
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இந்த சம்பவத்தில் தவெக மாவட்ட செயலாளர்களை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முக்கிய நபராக, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் இருந்தார். அவரை பிடிக்க எஸ்ஐடி தீவிரம் காட்டி வந்தது. கைது நடவடிக்கையில் சிக்காமல் இருக்க அவர் கோர்ட்டை நாடினார். தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். இவ்வளவு பரபரப்புக்கு நடுவே கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ஒரு நபர் கமிஷன், எஸ்ஐடி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. அவர்கள் வசம் இருக்கும் ஆவணங்களை உடனடியாக சிபிஐக்கு கொடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.