உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிர்வாகிகள் நியமனத்தில் தலைகீழாக மாறும் நிலைமை | Udhayanidhi | DMK | Party executives appoinments

நிர்வாகிகள் நியமனத்தில் தலைகீழாக மாறும் நிலைமை | Udhayanidhi | DMK | Party executives appoinments

குறையும் மா.செக்களின் பவர் ஓங்கும் உதயநிதியின் கை கலக்கத்தில் சீனியர்கள் திமுகவ பொறுத்த வரைக்கும் எப்பவுமே மாவட்ட செயலர்கள் தான், பவர் சென்டர்களா இருப்பாங்க.. ஆட்சியில இருந்தாலும், இல்லாட்டியும் அந்தந்த மாவட்ட கட்சி அமைப்புகள்ல, அவங்க வச்சது தான் சட்டமா இருக்கும்.. பகுதி, ஒன்றியம், நகரம், வட்ட செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள்னு, மாவட்ட செயலர் பரிந்துரை செய்றவங்களுக்கே தலைமையும் பதவிகள் தரும்... இப்ப, அந்த நிலைமை படிப்படியா மாறிட்டு வருதாம்... அதாவது, மாவட்டங்கள்ல சில பதவிகளுக்கு செயலர்கள் பரிந்துரை செய்யாதவங்களையும் தலைமை நியமிக்குதாம்... உதயநிதியோட உத்தரவுப்படி தான் இந்த நியமனங்கள்லாம் நடக்குதாம்.. மதுரையில ரெண்டு வருஷமா காலியா இருந்த புதுார் பகுதி செயலரா, இளைஞர் அணிய சேர்ந்த புண்ணியமூர்த்தின்னு ஒருத்தர உதயநிதி உத்தரவுப்படி நியமிச்சிருக்காங்க.. இத பார்த்துட்டு, சீனியர்கள் எல்லாம் கலக்கத்துல இருக்காங்களாம்..

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !