சென்னையில் பெரிய மழை கொட்ட போகுது: உதயநிதி | Udhayanidhi | Chennai Rain
தமிழகத்தில் அக்டோபர் 18ல் வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழையை எதிர்கொள்ள பேரிடர் ஆயத்த பணிகள் நடக்கிறது. சென்னையில் மண்டலம் வாரியாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழைக்கு முன்னதாகவே காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. திங்கள்கிழமை சென்னைக்கு கனமழைக்கான ஆரஞ்ச் ஆலர்ட் விடப்பட்டுள்ளது.
அக் 13, 2024