/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பேரிடர் காலம் என விமர்சித்த உதயநிதி; சுடச்சுட பதிலடி கொடுத்த தவெக | Udhayanidhi | TVK vs DMK
பேரிடர் காலம் என விமர்சித்த உதயநிதி; சுடச்சுட பதிலடி கொடுத்த தவெக | Udhayanidhi | TVK vs DMK
சென்னை திருவேற்காட்டில் நடந்த திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் நடப்பது அரசியல் பேரிடர்; அதிலிருந்து தமிழகத்தை திமுக மீட்கும் என்றார். உதயநிதியின் இந்த பேச்சுக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. அண்ணாதுரை உருவாக்கிய கட்சியை அவரது குடும்பத்தைக்கூட ஒதுக்கி தள்ளிவிட்டு, ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில்கூட இடம் பெற்றிராத ஒரு குடும்பம் மட்டுமே கைப்பற்றியதே, அதுதான் தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட பேரிடர் காலம்.
ஜூலை 05, 2026