உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 14 ஆண்டுகளுக்கு பின் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் | UK Election Result | Rishi Sunak | Keir Starmer

14 ஆண்டுகளுக்கு பின் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் | UK Election Result | Rishi Sunak | Keir Starmer

பிரிட்டனில் ஆட்சியை பறிகொடுத்தார் ரிஷி சுனக்! தொழிலாளர் கட்சி வெற்றி பிரிட்டன் பார்லிமென்ட்டின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசின் பதவிக்கலம் ஜனவரியில் தான் முடிகிறது. எனினும், பார்லிமென்ட்டுக்கு 6 மாதங்களுக்கு முன்பே தேர்தலை அறிவித்தார். பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தல் நேற்று நடைபெற்றது. 4.60 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்று இருந்தனர். பிரதமர் வேட்பாளர்களாக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் ரிஷி சுனக்கும், தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவர் கெயர் ஸ்டார்மர்ரும் Keir Starmer போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலையில் இருக்கிறது. பார்லிமென்டில் மொத்தம் உள்ள 650 இடங்களில் பெரும்பான்மைக்கு 326 தேவை. தொழிலாளர் கட்சி 410 இடங்களை கைப்பற்றி 14 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பிரிட்டனில் மாற்றம் தொடங்கியிருப்பதாக கெயர் ஸ்டார்மர் கூறினார்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை