/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பதவி ஏற்புக்கு முன்பே பதற்றத்தில் டிரம்ப் டீம் US| Cabinet nominees | White house team| Bomb Threats
பதவி ஏற்புக்கு முன்பே பதற்றத்தில் டிரம்ப் டீம் US| Cabinet nominees | White house team| Bomb Threats
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், ஜனவரியில் அதிபராக பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன்னதாக தமது அமைச்சரவை சகாக்களை அவர் தேர்வு செய்துள்ளார். வெள்ளை மாளிகையில் பணியாற்ற போகும் அதிகாரிகளையும் அவர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அவர்களில், விவசாயம், வீட்டு வசதி, தொழிலாளர், பாதுகாப்பு துறை, வணிக செயலாளர்கள் உட்பட 9 பேருக்கு 2 தினங்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது குறித்து அமெரிக்க போலீஸ் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவ 28, 2024