கமலா கட்சி கடனை அடைக்கவே 2 வருடம் ஆகுமாம் | US President Election | Trump | Kamala Harris
ஐஸ்கிரீம், ஓட்டல், சாப்பாடு ₹101 கோடி மலைக்க வைக்கும் கமலாவின் செலவு! முடிச்சுவுட்டாங்க போங்க! உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் ட்ரம்பும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்று வரும் ஜனவரியில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தேர்தலின்போது வேட்பாளர்கள் இருவரும் செலவிட்ட விவரம் வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரத்துக்காக கமலா ஹாரிஸ் 654 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 5 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும். ஆனால் டிரம்ப் 378 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவு செய்துள்ளார். கமலாவை விட 57 சதவீதம் குறைவான தொகையை ட்ரம்ப் தேர்தலுக்காக செலவிட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெரும் தொகையை செலவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுவதும் கமலா நடத்தியுள்ளார்.