உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்க அதிபர் வேட்பாளரை மாற்ற ஜனநாயக கட்சிக்குள் வாதம்! | US Presidential Election | Joe Biden

அமெரிக்க அதிபர் வேட்பாளரை மாற்ற ஜனநாயக கட்சிக்குள் வாதம்! | US Presidential Election | Joe Biden

அசதியில் கொஞ்சம் தூங்கிட்டேன்! சொதப்பலுக்கு காரணம் சொன்ன பைடன் டிஸ்க்: அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட உள்ளனர். அதிபர் வேட்பாளர்கள் தங்களுடைய கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பரஸ்பரம் விவாதம் செய்வர். இந்த விவாதத்தின் அடிப்படையிலேயே யாருக்கு ஓட்டு போடலாம் என மக்கள் முடிவு செய்வர். சமீபத்தில் அட்லாண்டாவில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்பின் வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் தடுமாறினார். இதையடுத்து ஜோ பைடனை மாற்ற வேண்டும் என அவருடைய ஜனநாயக கட்சியிலேயே பலர் குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர். வேறொரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மிகவும் வயதான அதிபராக உள்ள ஜோ பைடனுக்கு தற்போது 40 சதவீத வாக்காளர்களின் ஆதரவு உள்ளதாக அவருடைய கட்சியினர் தெரிவிக்கின்றனர். டிரம்புக்கும் 40 சதவீத ஆதரவு உள்ளது. அதனால் பைடனுக்கான வாய்ப்பு இன்னும் உள்ளது என அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ