/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிய ஸ்பெஷல் பர்மிஷன் | US Waiver | Russian Oil | Donald trumph
இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிய ஸ்பெஷல் பர்மிஷன் | US Waiver | Russian Oil | Donald trumph
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக, உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதம் இந்த பாதை வழியாகவே நடக்கிறது. இந்தியாவிடம் தற்போது அடுத்த சில வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருப்பு மட்டுமே உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கையிருப்பும் குறைவதால் மாற்று வினியோக வழிகளை தேட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லைக்கு அருகே உள்ள தனது கப்பல்கள் வாயிலாக, சில வாரங்களுக்குள் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.
மார் 06, 2026