உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உபியில் அகிலேஷ் கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜ | Uttar Pradesh assembly by-election counting | BJP vs

உபியில் அகிலேஷ் கட்சியை பின்னுக்கு தள்ளிய பாஜ | Uttar Pradesh assembly by-election counting | BJP vs

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுடன் உத்தரப்பிரதேசத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் பாஜ கூட்டணி 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காசியாபாத், குண்டர்கி, புல்பூர் உட்பட 5 தொகுதியில் பாஜ வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். பாஜ கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. அகிலேஷின் சமாஜ்வாடி கட்சி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 62 லோக்சபா தொகுதிகளை தன்வசம் வைத்திருந்த பாஜ, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் கோட்டை விட்டது. 33 இடங்களில் மட்டுமே பாஜவால் வெல்ல முடிந்தது. அதே நேரம், கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் அசத்தின. சமாஜ்வாடி 37, காங்கிரஸ் 6 இடங்களில் வென்றன. லோக்சபாவில் பாஜ தனி மெஜாரிட்டியை இழக்க, அந்த கட்சியின் கோட்டையான உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட பின்னடைவு தான் காரணம். இப்போது சட்டசபை இடைத்தேர்தலில் அந்த பின்னடைவை சரி செய்து மீண்டும் பாஜ எழுச்சி பெற்று இருப்பதாக தொண்டர்கள் கருதுகின்றனர்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ