ஸ்டாலின் குடும்பத்தின் விண்வெளி தொழில்: பின்னணி என்ன? | Vaanam Space Tech | Sabarisan Vedamurthy
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுக்கு போட்டியாக இருப்பது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். உலகம் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதிக எடை கொண்ட ராக்கெட், செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பும் சவாலான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியுள்ளது ஸ்பேஸ் எக்ஸ். சில நேரங்களில் நாசாவுக்கே சவாலான விஷயங்களை கூட ஸ்பேஸ் எக்ஸ் சாமர்த்தியமாக செய்து முடிக்கிறது. அமெரிக்காவில் எப்படி அரசால் நிர்வகிக்கப்படும் நாசாவுக்கு இணையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இருக்கிறதோ அதே போல இந்தியாவில் இதுவரை தனியார் நிறுவனம் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவே, ANTRIX என்கிற துணை நிறுவனத்தை உருவாக்கி வணிக ரீதியிலான விண்வெளி திட்டங்களை செய்து முடிக்கிறது. வெளிநாடுகள், பன்னாட்டு நிறுவனங்களின் செயற்கைகோள்களை பணம் பெற்றுக்கொண்டு விண்வெளிக்கு அனுப்பும் பணிகளை ANTRIX நிறுவனம் மேற்கொள்கிறது. இந்தியாவில் இதுவரை அரசால் நிர்வகிக்கப்படும் இஸ்ரோ மட்டுமே கோலோச்சி வந்த நிலையில் இப்போது அதற்கு போட்டியாக வானம் என்கிற தனியார் விண்வெளி மையத்தை தொடங்கி உள்ளார் ஸ்டாலின் மருமகன் சபரீசன்.