உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வருக்கு பயம்: வானதி | Vanathi Srinivasan | MK stalin

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வருக்கு பயம்: வானதி | Vanathi Srinivasan | MK stalin

ஸ்டாலின் சொல்வது ஓகே ஒரு கண்ணுக்கு மட்டும் சுண்ணாம்பு வைக்கலாமா? பா.ஜ எம்எல்ஏ வானதி சீனிவாசனின் அறிக்கை: பார்லிமென்டில் எப்போதும் பட்ஜெட் சுருக்கமாகத்தான் வாசிக்கப்படும். இது ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனால், பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் கூட இல்லை என்று திரும்ப திரும்பச் சொல்லி வேண்டுமென்றே, மக்களை ஏமாற்ற நினைக்கிறார். நிதி ஆணையம் பரிந்துரைக்கும் அடிப்படையிலேயே, மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை பகிர்ந்தளிக்கிறது. இதுவும் ஸ்டாலினுக்கு தெரியும். இருந்தும் பாஜ அரசு நிதி கொடுக்கவில்லை என்று திமுக அவதூறு பரப்புகிறது. தமிழக மக்களை பா.ஜ அரசுக்கு எதிராக திருப்பி அரசியல் ஆதாயம் தேட திமுக தொடர்ந்து முயற்சிக்கிறது. முருகபெருமானின் கந்தர் மலையை காக்க, சில மணி நேரங்களில் பல்லாயிரம் தமிழர்கள் திரண்டது ஸ்டாலினுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வேறு; ஆன்மிகம் வேறு என்று ஸ்டாலின் கூறியதுதான் பாஜவின் நிலைப்பாடும். ஆனால், கோயில்களை மட்டும் ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும்? மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்கள் அரசு கட்டுப்பாட்டிலா இருக்கிறதா? ஒரு கண்ணுக்கு வெண்ணையும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்க கூடாது. திமுக, மதச்சார்பற்ற கட்சி என்றால், கந்தர் மலையை அபகரிக்க நடந்த முயற்சியை தடுத்திருக்க வேண்டும். சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக, அடிப்படைவாதிகள் அங்கு சென்ற போது அனுமதியும் தந்து, அபகரிக்கும் முயற்சிக்கு துணை போனது. மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு முதல்வர் என்ற முறையில் வாழ்த்து கூறும் நீங்கள், தைப்பூச திருநாளுக்கும் வாழ்த்து கூறுங்கள் என வானதி கூறியுள்ளார்.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ