/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து | Seeman | varun kumar ips | defamation case
சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து | Seeman | varun kumar ips | defamation case
திருச்சி சரக டிஐஜியாக பணியாற்றிவர் ஐபிஎஸ் வருண்குமார். இப்போது சென்னையில் சிபிசிஐடி பிரிவு டிஐஜியாக உள்ளார். இவர் திருச்சியில் பணியாற்றிய போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் வார்த்தை மோதல்கள் ஏற்பட்டன. இரு தரப்பும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். திருச்சி 4வது குற்றவியல் நடுவர் கோர்ட்டில் சீமான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். சீமான் தூண்டுதலில், நாம் தமிழர் கட்சியினர் என் மீதும், என்னுடைய குடும்பம் மீதும் சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புகின்றனர். சீமான் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பேச்சை சுட்டி காட்டி வருண் மனுவில் கூறி இருந்தார்.
நவ 27, 2025