உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குழப்பத்தில் இருக்கிறது அதிமுக என விசிக விளக்கம் | VCK | Thirumavalavan | ADMK | BJP

குழப்பத்தில் இருக்கிறது அதிமுக என விசிக விளக்கம் | VCK | Thirumavalavan | ADMK | BJP

கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழா மேடையில் மோடியுடன் விசிக தலைவர் திருமாவளவனும் இருந்தார். விழா முடிந்தபின் பேட்டி கொடுத்த திருமாவளவன், விழாவில் பிரதமர் அறிவித்த அறிவிப்புகளை வரவேற்கிறேன். தொகுதி எம்பி என்ற அடிப்படையில் கலந்து கொண்டேன் என கூறியிருந்தார். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மோடியுடன் இருந்தது பேசு பொருளானது. இதற்கு விளக்கமளித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அறிக்கையில் கூறி உள்ளதாவது; இதில் எந்த அரசியலும் இல்லை. தொகுதியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்பது மரபாகவும், நாகரீக அரசியலாகவும் பார்க்கிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை என சொல்லியிருக்கிறார். இதில் எந்த திருப்புமுனையும் இல்லை. விசிக எப்போதும் பாஜவுடன் அரசியல் ரீதியான உறவு வைக்க மாட்டோம் என எங்கள் தலைவர் அறிவித்து உள்ளார். ஆனாலும் அதிமுக ஒருவித குழப்பத்தில் இருப்பதை ராஜேந்திர பாலாஜி உணர்த்துகிறார் என கூறி உள்ளார்.

ஜூலை 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை