உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அலட்சியமாக இருந்த 3 வருவாய் அலுவலர்கள் சஸ்பெண்ட் | VCK Flag Poll | 3 Revenue officers suspend | Madu

அலட்சியமாக இருந்த 3 வருவாய் அலுவலர்கள் சஸ்பெண்ட் | VCK Flag Poll | 3 Revenue officers suspend | Madu

மதுரை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் ஏற்கனவே இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, கடந்த 7ம் தேதி அனுமதியின்றி அக்கட்சியினர் கூடுதல் உயரத்தில் கொடி கம்பம் நட்டுள்ளனர். அதை அகற்றும்படி வருவாய் அலுவலர்களும், போலீசாரும் அறிவுறுத்தியபோது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் அனுமதி அளிக்கப்பட்டு மறுநாள் அதே கொடி கம்பத்தில் திருமாவளவன் கொடியேற்றினார். கூடுதல் உயரத்தில் கொடி கம்பம் அமைக்க கட்சியினர் அனுமதி கேட்டு கடிதம் அளித்தபோதே வருவாய்த்துறை அனுமதி அளிக்கவில்லை. அப்படி இருந்தும் முன்னறிவிப்பின்றி அக்கட்சியினர் கொடி கம்பத்தை நிறுவியுள்ளனர். இதை முன்கூட்டியே கவனித்து தடுக்க தவறியதாக வருவாய் அலுவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆர்ஐ அனிதா, விஏஓ பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உத்தரவிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக துணை தாசில்தார் ராஜேஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை