உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இரட்டை இலக்கத்தில் தான் போட்டி! ஸ்ட்ராங்காக நிற்கிறது விசிக | VCK | Thirumavalvan | DMK Alliance

இரட்டை இலக்கத்தில் தான் போட்டி! ஸ்ட்ராங்காக நிற்கிறது விசிக | VCK | Thirumavalvan | DMK Alliance

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக சென்ற தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. குறைந்தது 12 தொகுதிகளை ஒதுக்குமாறு திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் நடந்த முதற்கட்ட பேச்சில் விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சென்ற தேர்தல் போலவே ஆறு தொகுதிகளில் போட்டியிடுங்கள்; வேண்டுமென்றால், கூடுதலாக ஓரிரு தொகுதிகளை கட்சி தலைமையிடம் கேட்டு வாங்கி தருகிறோம். இரட்டை இலக்கத்தில் ஆசைப்படாதீர்கள் என திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதிருப்தி அடைந்த திருமாவளவன் தொகுதி பங்கீட்டு பேச்சில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினார். அதற்கு தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேசுமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

மார் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ