உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங் MLA-வை துருவி எடுக்கும் அமலாக்கத்துறை | cong mla veerendra puppy ed raid | illegal betting case

காங் MLA-வை துருவி எடுக்கும் அமலாக்கத்துறை | cong mla veerendra puppy ed raid | illegal betting case

சிக்கியது ரூ.18 கோடி பணம், தங்கம் ED கஸ்டடியில் காங்கிரஸ் எம்எல்ஏ! வீரேந்திராவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் காங்கிரசை சேர்ந்த வீரேந்திர பப்பி வயது 50. கோவாவில் பல சூதாட்ட விடுதிகளை நடத்தி வந்தார். சட்டவிரோதமாக ஆன்லைன், ஆப்லைன் மூலம், பெட்டிங் நடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார். பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்தார். சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டார். அமலாக்கத்துறை இதை மோப்பம் பிடித்து விட்டது. நேற்று முன்தினம் பெங்களூரு உட்பட வீரேந்திர பப்பிக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 12 கோடி ரூபாயை ரொக்கமாக கைப்பற்றினர். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர். வடகிழக்கு மாநிலமான சிக்கிம் சென்றிருந்த வீரேந்திர பப்பியையும் அமலாக்கத்துறை கைது செய்தது. சிக்கிமில் இருந்து வீரேந்திர பப்பி நேற்று அதிகாலை, விமானத்தில் பெங்களூரு அழைத்து வரப்பட்டார். மருத்துவப் பரிசோதனை முடிந்த பின், பெங்களூரு 35வது சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி சையத் பி.ரகுமான் வீட்டில் அவரை அமலாக்கத்துறையினர் ஆஜர் படுத்தினர். அப்போது பப்பியிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால், அவரை 14 நாட்கள் தங்கள் கஸ்டடிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கேட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 14 நாட்களுக்கு பதில் 5 நாட்கள் கஸ்டடி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்று அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ