உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மீண்டும் மலர்கிறதா பாஜ-அதிமுக கூட்டணி! BJP | ADMK | Velumani | Nainar Nagendran

மீண்டும் மலர்கிறதா பாஜ-அதிமுக கூட்டணி! BJP | ADMK | Velumani | Nainar Nagendran

லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க வெளியேறியது. இனிமேல் எந்த தேர்தலிலும், பா.ஜ உடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்தார். மாவட்ட செயலர்கள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பா.ஜ தலைவர்களில் ஒரு பிரிவினர், அ.தி.மு.க கூட்டணியை விரும்புகின்றனர். அதேபோல, அ.தி.மு.க.விலும் ஒரு தரப்பினர், பா.ஜ. கூட்டணியை விரும்புகின்றனர். ஆனால், பழனிசாமியும், அண்ணாமலையும் விரும்பவில்லை. இதனால், இரு கட்சிகளிலும் கூட்டணியை புதுப்பிக்க விரும்புவோர், விரும்பாதவர் என, இரு பிரிவுகள் உருவாகி உள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை, பழனிசாமி தலைமையில் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. நடிகர் விஜய் கட்சி துவக்கியுள்ள நிலையில், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், தி.மு.க., கூட்டணியை வீழ்த்தலாம் என, முன்னாள் அமைச்சர்கள் சிலர் நம்புகின்றனர். இதை பழனிசாமி ஏற்கவில்லை. நீக்கியவர்களை சேர்க்க வாய்ப்பில்லை. பா.ஜ கூட்டணிக்கும் வாய்ப்பில்லை என்று அறிவித்துள்ளார். ஆனாலும், இரு தரப்பிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதை முறியடிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ். பேரணியில் பங்கேற்ற, தன் தீவிர ஆதரவாளரான கன்னியாகுமரி மாவட்ட செயலர் தளவாய்சுந்தரத்தின் பதவிகளை பறித்து, பா.ஜ. ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் பழனிசாமி. தளவாய் வருத்தம் தெரிவித்த பின், பறித்த பதவிகளை வழங்கினார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை