தன்கர் ராஜினாமாவில் உலுக்கும் மர்மம்! அதற்குள் தேர்தல் vice president jagdeep dhankhar | bjp vs cong
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை துவங்கிய நிலையில், முதல் நாள் இரவே துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்தார். மருத்துவ காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக ஜனாதிபதிக்கு தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமாவை மறுநாளே ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதை அரசிதழிலும் மத்திய உள்துறை வெளியிட்டது. உடனே துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 60 நாட்களுக்குள் இந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதாவது, செப்டம்பர் 19ம் தேதிக்குள் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பணியில் தலைமை தேர்தல் கமிஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது. யார் அடுத்த ஜனாதிபதி என்பது தான் இப்போது இருக்கும் எதிர்பார்ப்பு. ஒரு வேளை பாஜவின் என்டிஏ கூட்டணியும், இண்டி கூட்டணியும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் தேர்தல் நடப்பது உறுதியாகி விடும்.