உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் பெயரை உச்சரிக்காமல் 16 நிமிடம் ஸ்டாலின் பேச்சு | Vijay | CM Stalin | Karur | Karur Stampede |

விஜய் பெயரை உச்சரிக்காமல் 16 நிமிடம் ஸ்டாலின் பேச்சு | Vijay | CM Stalin | Karur | Karur Stampede |

ஒரு இடத்தில் கூட பெயரை சொல்லாத CM! காரணம் என்ன? 2வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் கரூர் சம்பவம் பற்றிய விவாதம் நடந்தது. கரூர் சம்பவத்தில் நடந்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை வாசித்தார். அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மருத்துவ உதவிகள், கரூருக்கு தான் சென்ற விவரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் புள்ளி விவரங்களுடன் சொன்னார். 16 நிமிடங்கள் பேசிய முதல்வர் ஸ்டாலின் எந்த இடத்திலும் நடிகர் விஜய் பெயரை உச்சரிக்கவில்லை. அக்கட்சி தலைவர், தமிழக வெற்றி கழக தலைவர், அவரின் அரசியல் நிகழ்ச்சி, இந்த கட்சியின் நிகழ்ச்சி, தவெக கட்சியின் தலைவர் என மட்டுமே பேசினார். இது குறித்து அரசியல் வல்லுநர்கள் கூறுகையில் ; பொதுவாக அரசியல் களத்தில் வளர்ந்து வரும் அல்லது மக்களின் அங்கீகாரம் பெறாத கட்சிகளின் பெயர்களையும் அவர்களின் செயல்களையும் கவனமாக கையாள்வது திமுகவின் அரசியல் ஸ்டைல். எந்த சந்தர்ப்பத்திலும், பெயர்களை உச்சரிக்காமல், முக்கியத்துவம் தராமல் தவிர்ப்பதில் திமுக கவனமாக செயல்படும். விஜய்யை பற்றியோ, அவரின் கட்சியை பற்றியோ பெரிதாக பேச வேண்டாம், பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர்கள், முதல்கட்ட மற்றும் 2ம் கட்ட தலைவர்களுக்கு ஏற்கனவே கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தான் விஜய் பெயரை குறிப்பிடாமல் ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்கின்றனர்.

அக் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ