அரசியல் களத்தில் தவெகவை வேகப்படுத்தும் விஜய் | Vijay TVK | Parandur airport | Republic Day
குடியரசு தினத்தில் பரந்தூர் செல்வதற்கு விஜய் திட்டம்? நடிகர் விஜய், கட்சி தொடங்கியதாக அறிவித்து ஓராண்டு ஆகிறது. கடந்த அக்டோபரில் முதல் மாநாடு நடத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். அதன் பின் களத்திற்கு வரவில்லை. அறிக்கை அரசியல்தான் நடத்துகிறார். சினிமாவில் விஜய் கவனம் செலுத்தி வருவதால், தமிழக வெற்றிக்கழகம் உயிரோட்டமாக இல்லை; முறையாக வழி நடத்தப்படாததால் கட்சி நிர்வாகிகள் சோர்ந்து போயிருக்கிறார்கள். இச்சூழலில், பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை அழைத்து விஜய் பேசியிருக்கிறார். அரசியல் களத்தில் கட்சியை வேகப்படுத்த சில ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார். அது பற்றி தவெக நிர்வாகி ஒருவர் கூறினார். தவெகவில் நிர்வாக கட்டமைப்பு முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. 60 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 2 சட்டசபை தொகுதிக்கு 1 மாவட்ட செயலாளர் கட்டமைப்பை மாற்ற விஜய் உத்தரவிட்டார். அதில், மாநில நிர்வாகிகள் கவனம் செலுத்தவில்லை.