உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டெல்லி பயணத்துக்கு பின் விஜயிடம் மாற்றம்? குழப்பத்தில் தவெக | Vijay TVK | Budget Reaction

டெல்லி பயணத்துக்கு பின் விஜயிடம் மாற்றம்? குழப்பத்தில் தவெக | Vijay TVK | Budget Reaction

2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என, முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மறுபக்கம், குறு, சிறு, நடுத்தர தொழில் துறையை வளர்க்கும் பட்ஜெட் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பாராட்டி உள்ளார். ஆனால், தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு வரப்போவதாக சொல்லும் த.வெ.க., தலைவர் விஜய், இதுவரை எவ்வித கருத்துமே சொல்லவில்லை. இது தொடர்பாக, அவரது கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் பட்ஜெட் தான், நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். எனவே, பட்ஜெட் குறித்து தங்களின் நிலைப்பாட்டை, எல்லா கட்சிகளும், அமைப்புகளும் சொல்வது வழக்கம்.

பிப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை