/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தவெக நிர்வாகிகளுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்க முடிவு! Vijay | TVK | Vijay Fan Mindset
தவெக நிர்வாகிகளுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்க முடிவு! Vijay | TVK | Vijay Fan Mindset
2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட, தவெக கட்சியை விஜய் தயார்படுத்தி வருகிறார். அத்துடன் தேர்தல் செலவுக்காக, ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். தன் ரசிகர் மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்கள், தன் நம்பிக்கையானவர்களின் உறவினர்களுக்கு, மாவட்டச் செயலர் பதவிகளை விஜய் வழங்கியுள்ளார். இதுவரை விஜயை திரைப்படங்களிலும், திரைப்பட பாடல் வெளியீட்டு நிகழ்வுகளிலும் மட்டுமே பார்த்து ரசித்த அவரது கட்சியின் மாவட்டச் செயலர்கள், தற்போது அருகே பார்த்து வருகின்றனர். அதனால், உற்சாகம் அடைந்து விடுகின்றனர்.
ஏப் 01, 2025