முதல் வாரமே முக்கிய நிகழ்ச்சி அறிவிப்பு வெளியானது! Vijay | TVK | Campaign | 2026 Election | DMK
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், தனது பிரசாரத்தை தீவிரப்படுத்துவார் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் வரும் 13ம்தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார். விஜயின் பிரசாரம் தங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என திமுக நினைத்தது. ஆனால் விஜயின் வீக் எண்ட் பிரசாரம், திமுக தலைமைக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வாரந்தோறும் விஜயின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து திமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: விஜய் தொடர்ச்சியாக பிரசாரம் செய்தால், அதை சமாளிப்பது அரசுக்கு பெரிய சிரமமாக இருக்கும். ஆனால், வாரந்தோறும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு பதிலடி தரும் வகையில், திமுகவில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.