நாங்க எப்படி எல்லாம் இருந்தோம்; விஜயகாந்தை நினைவு கூர்ந்த மோடி vijayakanth| captain| pm Modi
பிரதமர் மோடி- விஜயகாந்த் இடையேயான நட்பு பற்றி பெருமையுடன் பேசி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வீடியோ வெளியிட்டார். இருவருக்குமான நட்பு அரசியலை தாண்டிய ஒன்று; விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது, ஒரு சகோதரரை போல கவலைப்பட்டு அடிக்கடி தொடர்பு கொண்டு கேட்டறிவார். அவர்களுடைய நட்பு, பரஸ்பர மரியாதை, அன்பால் கட்டப்பட்ட அரிதான ஒன்று என பிரேமலதா கூறியிருந்தார். இந்த வீடியோவை டேக் செய்து பிரதமர் மோடி, விஜயகாந்த் பற்றி பெருமையுடன் பதிவிட்டுள்ளார். அதில், எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என மோடி பதிவிட்டு உள்ளார். தமிழகத்தில் அதிமுக- பாஜ கூட்டணி அமைத்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இருந்த தேமுதிக அதன் பின் யாருடனும் கூட்டணி இல்லை என்றது. இந்நிலையில் தேமுதிகவை என்டிஏ கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், விஜயகாந்த்-மோடி நட்பு தொடர்பான பிரேமலதாவின் திடீர் வீடியோவும்; அதற்கு மோடியின் ரியாக் ஷனும் கூட்டணி தொடர்பான பாசிட்டிவ் யூகங்களை எகிற வைத்துள்ளது.