உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குறித்த தேதியில் புதுச்சேரியில் விஜய் நிகழ்ச்சி நடத்துவது கஷ்டம் | actor vijay roadshow not allowed

குறித்த தேதியில் புதுச்சேரியில் விஜய் நிகழ்ச்சி நடத்துவது கஷ்டம் | actor vijay roadshow not allowed

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்கி மக்களை சந்தித்து வந்தார். கடந்த செப்டம்பரில் கரூர் நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானதால், விஜய்யின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரூர் சம்பவம் பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இச்சூழலில், கடந்த மாதம் சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு தவெக அனுமதி கேட்டது. ஆனால், போலீசார் மறுத்துவிட்டனர். தமிழக அரசு கெடுபிடி காட்டுவதால், புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் முடிவு செய்தார். வரும் 5ம் தேதி காலாப்பட்டில் முதல் கன்னியக்கோவில் வரை ரோடு நடத்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டார்.

டிச 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ