விக்கிரவாண்டி தேர்தல் முடிவு முழு விவரம் | vikravandi election result | DMK won | DMK vs PMK vs NTK
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உட்பட 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக, தேமுதிக தேர்தலை புறக்கணித்தன. 10ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 1.95 லட்சம் பேர் ஓட்டு போட்டனர். 82.47 சதவீத ஓட்டு பதிவானது. கணிசமானோர் ஓட்டு போட்டதால் முடிவு என்னவாக இருக்குமோ என்று பெரும் எதிர்பார்ப்பே நிலவியது. பரபரப்பான சூழலில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் இருந்தே திமுக கை ஓங்கியது. 20 சுற்றுகளிலும் திமுக ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1.24 லட்சம் ஓட்டு வாங்கி அபார வெற்றி பெற்றார். 67,757 ஓட்டு வித்தியாசத்தில் இந்த வெற்றியை அவர் உறுதி செய்தார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டு கிடைத்தது. ஆறில் ஒரு பங்குக்கு மேல் ஓட்டு பெற்றதால் பாமகவுக்கு டிபாசிட் கிடைத்தது. அதே நேரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 ஓட்டு தான் பெற்றார். நாம் தமிழர் கட்சி டிபாசிட் இழக்க நேரிட்டது.