கவனிப்பு தொடங்கியதால் முடங்கியது விவசாய பணி | Vikravandi by election | Political party | voters
குவாட்டர், கோழி பிரியாணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கட்சிகளின் கவனிப்பு அமோகம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருந்தாலும் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியான திமுக எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதனால் 25 அமைச்சர்கள், ஏராளமான திமுக-- எம்.எல்.ஏ.,க்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என ஒரு பட்டாளமே விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணி செய்கிறது. அதேபோல் மாநிலம் முழுதும் இருந்து வந்துள்ள பாமக நிர்வாகிகள், தொண்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னணி தலைவர்களும் குவிந்துள்ளனர். கட்சியின் நிறுவனர் ராமதாசின் சொந்த மாவட்டம் என்பதால், விக்கிரவாண்டியில் எப்படியாவது வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் பாமகவினர் தீவிரமாக உள்ளனர். நாம் தமிழர் கட்சியினரும், தேர்தல் பணிகளை தங்களுக்கே உரிய பாணியில் வேகப்படுத்தி வருகின்றனர். திமுக - பாமக கட்சியினருடன் அவர்களின் கூட்டணி கட்சியினரும் தினமும் விக்கிரவாண்டிக்கு படையெடுத்தபடி உள்ளனர். இதனால் தொகுதியில் எங்கு பார்த்தாலும் கரை வேட்டிகளாக காட்சி அளிக்கிறது.