/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விவேகானந்தர் பாறை காவிக்கொடியை அகற்ற முயற்சி | Vivekananda Kendra | Vivekananda Rock Memorial
விவேகானந்தர் பாறை காவிக்கொடியை அகற்ற முயற்சி | Vivekananda Kendra | Vivekananda Rock Memorial
தமிழகத்தில் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில் கூட ரோடு சந்திப்புகளில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆக்கிரமித்துள்ளன. சில கட்சிகள் புதிது புதிதாக கொடி கம்பங்களை நடுவதற்கு முன்வருவதும், அதிகாரிகள் அவற்றை தடுப்பதும் தொடர்கிறது. இதனால் அடிக்கடி தகராறு, தள்ளு முள்ளு ஏற்படுவதும் வழக்கமாகி விட்டது. இது குறித்து மதுரை பழங்காநத்தம் கதிரேசன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.
ஏப் 01, 2025