உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜனாதிபதியையும், என்னையும் கெஜ்ரிவால் அவமதித்து விட்டார் | VK Saxena | Delhi Governor | Written lette

ஜனாதிபதியையும், என்னையும் கெஜ்ரிவால் அவமதித்து விட்டார் | VK Saxena | Delhi Governor | Written lette

டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிறை சென்று ஜாமினில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதிஷியை முதல்வராக்கினார். சட்டசபை தேர்தலில் வென்று மக்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆவேன் என கெஜ்ரிவால் அப்போது சபதம் எடுத்தார். வரும் பிப்ரவரியில் டில்லி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இப்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஆதிஷியை தற்காலிக முதல்வர் என அழைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஆதிஷிக்கு, கவர்னர் வி.கே.சக்சேனா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். சில நாட்களுக்கு முன், உங்களை தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாக அழைத்தது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற வார்த்தைகளால், என்னை கவர்னராக நியமித்த ஜனாதிபதியையும், உங்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த என்னையும் அவர் அவமதித்து விட்டார். தற்காலிக முதல்வர் என்ற விளக்கம் அரசியலமைப்பில் இல்லை. என் இரண்டரை ஆண்டு கால பதவியில், முதன்முறையாக, முதல்வர் பதவியில் வேலை செய்யும் ஒருவரை பார்த்தேன். உங்கள் கட்சி தலைவர் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது ஒரு துறையை கூட கவனிக்கவில்லை; கோப்புகளில் கூட அவர் கையெழுத்திடவில்லை. ஆனால் நீங்கள் அப்படியில்லை. அவரை விட பன்மடங்கு சிறப்பாக பணியாற்றுகிறீர்கள்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !