மார்ச் 10ல் தொடங்கும் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய முடிவு
ஸ்லீம்கள் நன்கொடையாக வழங்கிய நிலங்கள், சொத்துகளை நிர்வகிக்கும் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ல் லோக்சபாவில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காரணமாக மசோதா பார்லி கூட்டு குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. பாஜ எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு விசாரணை நடத்தி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 14 திருத்தங்களை ஏற்றது. அதுதொடர்பான அறிக்கை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஜனவரி 30ல் சமர்பிக்கப்பட்டது. பார்லி கூட்டுக் குழு தந்த அறிக்கை லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பார்லி கூட்டுக் குழுவின் திருத்தங்களுக்கு கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது பாதி வரும் மார்ச் 10ம் தேதி தொடங்குகிறது. அப்போது வக்பு திருத்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.